இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்..!


பெரும்பாலும், நம் கலாச்சாரப்படி திருமணத்தில் ஆண்களை விட பெண்களுக்கு வயது குறைந்ததாக இருக்க வேண்டும். இதுவே பல வருடமாக நம் நடைமுறையில் இருக்கும் வழக்கமாக இருக்கிறது. 
 
ஆனால், சமீபகாலமாக நட்சத்திர தம்பதிகள் பலர் அதை கருத்தில் கொள்ளவில்லை. பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தி வருகின்றனர். 
 
கோலிவுட்டில் ஹாட் ஹிட் நாயகியாக இருந்தவர் சினேகா. இவருக்கு 36 வயது ஆகிறது. 2009ல் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார். பின்னர், பிரசன்னா சினேகாவின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். 
 
காதல் வதந்தி தீயாக பரவியது. இதை தொடர்ந்து,மே 11, 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 35 வயதாகும் பிரசன்னா, இவரை விட 1 வயது இளையவர். உலக அழகி படம் பெற்ற ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டின் பெரிய குடும்பத்துக்கு பையனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
44 வயதாகும் இவர் அபிஷேக்கை விட 2 வயது மூத்தவர் என்பதால் முதலில் காதலுக்கு தயங்கி இருக்கிறார். இருந்தும் அபிஷேக் மீதான அன்பால் காதலை ஒப்புக்கொண்டார்.பிறகு இருவீட்டார் சம்மதமும் கிடைத்ததுடன், இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தனர். 
 
43 வயதாகும் ஷில்பா ஷெட்டி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்ராவை காதலித்து வந்தார். லண்டனைச் சேர்ந்த ராஜ் குந்த்ரா தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு, 2009ம் ஆண்டில் ஷில்பாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 
 
ஷில்பாவை விட ராஜ் குந்தா ஒரு வயது இளையவர். மகேஷ் பாபு தெலுங்கு மொழித் திரைப்படத்தில் மாஸ் நடிகராக இருப்பவர். இவருக்கு 42 வயது ஆகிறது. இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், தனது 25வது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
இவரின் மனைவி நம்ரதா. மகேஷை விட 4 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.