ரிசார்ட்டில் நடிகையுடன் வாரிசு நடிகர் கும்மாளம் - கரையும் கோடிகள்..!
விற்பனை துறையில் கொடி கட்டி பறந்து கோடிகளை குவித்தவர் அந்த பெரிய மனிதர். சமீபத்தில், கொரோனா தொற்றின் காரணமாகவும், ஏற்கனவே இருந்த உடல் உபாதைகள் காரணமாகவும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை விட்டு மறைந்தார்.
தொழில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாட்டுடன் செயல் பட்டு வந்த அவரது மகன் கிழக்கும் தெரியாமல் வடக்கும் தெரியாமல் கால் போன போக்கில் சுற்றி வருகிறார். உழைத்தால் தான் பணத்தின் அருமை தெரியும் என்று சொல்வார்கள்.
ஆனால், இவரோ அப்பாவின் சொத்தில் சுக போகமாக வாழ்ந்து வளர்ந்த ராஜா வீட்டு கண்ணு குட்டி. படங்களில் சம்பளம் வாங்கி கொண்டு நடிக்கும் நடிகர்கள் மத்தியில் படத்தில் நடிக்க பணத்தை செலவு செய்து வாய்ப்பை பெற்ற இளவரசர். கோடிக்கணக்கான சொத்திற்கு ஒரே வாரிசு.
இதனை இன்னும்பல மடங்காக பெருக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இளம் நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பால் கோடிகளை கரைத்து வருகிறார் இவர். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை அவருடன் நடித்த இளம் நடிகை ஒருவர் அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்று கவனித்துக்கொண்டார்.
இந்த கவனிப்பால் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தினம் தினம் சந்தித்து கும்மாளம் போட்டு வருகிறாராம்.
விஷயம் அறிந்த இவரது நலம் விரும்பிகள் போற போக்கை பார்த்தால் இவரது தந்தை சேர்த்து வைத்திருக்கும் சொத்தையும், அவரது நிருவனங்களில் வேலை பார்த்து பிழைப்பை நடத்தி வரும் ஆயிரக்கணக்கான போரையும் நடுத்தெருவில் நிறுத்தி விடுவார் போல இருக்கே என வெளிப்படையாகவே பேசுகிறார்களாம்.
இளவரசரே பணம் போனால் சம்பாதிச்சுகலாம் என்பதெல்லாம் அந்த காலம் அது அது அந்த காலம். கையிருப்பு கறைந்துவிட்டால் நம் கையே நமக்கு எதிராக வேலை செய்யும் இந்த காலம் இது இது இந்த காலம்.