பதின்ம வயதில் பருவமொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பிரவீனா..!
தீரன் அதிகாரம் ஒன்று, சசிகுமாரின் வெற்றிவேல், விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பிரவீனா. இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியல்களில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் அம்மாவாக நடித்து பிரபலமானவர் பிரவீணா. சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிப்புக்காக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் எனவும் கேரளாவில் புகழ் பெற்றவர்.பிரியமானவள் சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
அந்த தொடருக்குப் பின் மீண்டும் சன் டிவி-யில் ‘மகராசி’ சீரியல் மூலம் நடிப்பைத் தொடர்ந்தார். தற்போது விஜய் டிவி-யின் ராஜா ராணி-2 சீரியலில், நாயகனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
அதோடு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். இதெற்கெல்லாம் மேலாக, மஞ்சு வாரியர், பத்ம பிரியா, காவ்யா மாதவன் போன்றோருக்கு 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார்.
துபாயில் வங்கியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பிரமோத் என்பவரை, திருமணம் செய்துக் கொண்ட பிரவீணாவுக்கு இப்போது தான் 41 வயது. 10-12 வயது மதிக்கத்தக்க மகள் இருக்கிறார்.
ஆனால் அதற்குள்ளாகவே சினிமா, சீரியலில் ஹீரோக்களுக்கு அம்மாவாக கச்சிதமாக நடித்து வருகிறார். இதற்கு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது தான் காரணமாம்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பிரவீணா வீட்டில் தோட்டம் அமைப்பதிலும் ஆர்வம் உள்ளவர்.
இந்நிலையில், தன்னுடைய பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.