நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? - இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..?


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ர‌ஞ்சிதா. "நாடோடி தென்றல்" படம் மூலம் அறிமுகமான நடிகை ரஞ்சிதா, தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 
 
திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடதியில் நித்தியானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.
 
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
நித்தி மீது பல வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்க, வீடியோவில் இடம்பெற்றிருந்த ரஞ்சிதா மீது நடிவடிக்கைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 
 
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.சி.மனோகரன் இன்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறி, ஆன்மீகப் பணிகளில் பிரபலமான நித்யானந்தா சாமியாருடன் பிரபல நடிகை ரஞ்சிதா இருந்த காட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 
 
நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் படங்கள் பத்திரிகைகளிலும் வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற காட்சிகள் மக்கள் மனதை கெடுக்கக் கூடியதாகும். இளைய தலைமுறையினரும், பெண்களும் சமுதாய சீரழிவில் சிக்கி விட இது காரணமாக அமையலாம். 
 
எனவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். 
 
இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னமும் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாளில், அவரிடம் முறைப்படி தீட்சை பெற்று சந்நியாசி ஆனார் நடிகை ரஞ்சிதா. 
 

ரஞ்சிதாவின் புதிய பெயர்

 

 
இதற்கு கர்நாடகத்தில் உள்ள மடாதிபதிகளும் இந்துத்துவா அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி "மா ஆனந்தமயி" என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
ஆனால், தற்போது ரஞ்சிதா எங்கு இருக்கிறார்..? என்ன செய்கிறார் என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
Blogger இயக்குவது.