சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தயாரான மனிஷா யாதவ்..!


தமிழ் நடிகைகளுள் மிகவும் கவர்ச்சி மற்றும் பல கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா யாதவ் 1992 ல் நவம்பர் 3 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். 
 
இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. இவர் தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் வழக்கு எண் 18/9 என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். 
 
இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இவர் பின் தமிழ் திரைபடத்திற்கே வந்தார். 
 
பின் இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 
 
பின் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன்னல் ஓரம் என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இந்த திரைபடத்தில் கல்யாணி என்ற ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். 
 
அதற்கு பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டைய கிளப்பனும் பாண்டிய என்ற திரைபடத்தில் நடித்து உள்ளார். இந்த படமும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 
 
அதற்கு பிறகு பெரிய வெற்றிகளை குவித்த திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற படத்தில் அதிதி என்ற கதாபாத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களை தன் பக்கம் விழ வைத்துள்ளார். 
 
இந்த படம் பார்த்தவர்களுக்கு தெரியும் இவர் நடிப்பு என்ன என்பதை. பின் சென்னை 600028 2 இன்னிங்க்ஸ் என்ற திரைபடத்தில் சொப்பன சுந்தரி என்ற கதாபாத்தில் நடித்துள்ளார். 
 
பின் 2016 ஆண்டு வெளிவந்த பொட்டு என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு ஒரு திருப்பம் என்றால் அது திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற படம் தான் இவருக்கு இத்தனை புகழ்களை பெற்று தந்தது.

இந்நிலையில், தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள இவர் தனக்கு தெரிந்த இயக்குனர்களுக்கு தூது விட்டு வருகிறாராம். விரைவில், அடுத்த இன்னிங்சை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
Blogger இயக்குவது.