ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் வனிதா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை வனிதா. அதன் பின் அவரின் லெவலே வேற என சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. அவரின் வாழ்க்கையும் அப்படித்தான் போனது. 
 
டான் போல கெ த்து காட்டி வந்தவர் பீட்டர் பால் என்பவருடன் மூன்றாம் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும், சிலரின் எதிர்ப்பையும் சம்பாதித்த அவர் ஓய்ந்து போகும் அளவிற்கு பதிலடி கொடுத்து வந்தார். 
 
பீட்டர் பாலின் நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்த வனிதா அவரை விட்டு விலகினார். அமைதியான வனிதாவுக்கு சில ஆதரவு குரல் தொடர்ந்து வந்ததையும் மறுக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக வந்த அவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் சீசனின் வெற்றியாளரானார். 
 
தற்போது குக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள அவர் சினிமாவிலும் நடிக்கவுள்ளாராம். நடமாடும் நகைக்கடை போல சுற்றி வரும் ஹரி நாடார் என்பவருக்கு ஹீரோயினாக நடிக்கிறாராம். இதற்கான பட பூஜை போடப்பட்டுள்ளது. 
 
 
ஹரி நாடார் என்பவர் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். '2K அழகானது காதல்’ என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று சென்னையில் பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக வனிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.