"ச்சை - கேரவேனா.? பப்ளிக் டாய்லெட்டா..?.." - பிரபல நடிகையின் கேரவேனுக்குள் நுழையவே பயப்படும் படக்குழு..!


ஒரு காலத்தில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு டூயட் பாடி வந்த நடிகை அவர். பிறந்தது மும்பை என்றாலும், பாலிவுட், டோலிவுட் என பலமுயற்சிகள் செய்து அம்மணி முகத்தை காரணம் காட்டி துரத்தி விட்டனர் இயக்குனர்கள். 
 
ஆனால், தமிழில் அம்மணி அறிமுகமான முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடித்தது. கல்லூரி மாணவர், இளவட்டங்கள் என கூட்டம் கூட்டமாக படத்தை கொண்டாடினார்கள். 
 
அதனை தொடர்ந்து ஒல்லி நடிகர், விரல் நடிகர், லீடர் நடிகர் ஆகியோருடன் கூட ஜோடி போட்டு அதகளம் செய்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே இவரது மார்கெட் அவுட் ஆனது. எங்கே சென்றார் என்று தேடும் அளவுக்கு காணமால் போனார் அம்மணி. 
 
இந்நிலையில், பிரபல ஹீரோவின் அண்ணனும், முன்னணி இயக்குனருமான ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். குடும்பத்தில், புருஷன் குடித்தாலே டப்பா டான்ஸ் ஆடிவிடும். புருஷன், பொண்டாட்டி என இருவரும் போட்டி போட்டு குடித்தால் குடும்பம் என்ன ஆகும்.. வீடு வாசலாகி.. வாசல் ரோடாக மாறி போய்விடும். 
 
விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..? அவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொண்ட இயக்குனர் ஆளை விட்டால் போதும் என நடிகையை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்யும் போது பெரிய செட்டில் மெண்ட் நடந்தது என்ற பேச்சும் உண்டு. 
 
இப்போது, இயக்குனர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என செட்டிலாகி விட்டார். ஆனால், நடிகையோ கால் போன போக்கில் சுற்றி வருகிறார். ஒரு மாதம் மும்பையில் இருக்கிறார்.. ஒரு மாதம் சென்னையில் இருக்கிறார்.. ஒரு மாதம் ஆந்திராவில் இருக்கிறார்.. இப்படி சுதந்திர பறவையாக ஊர் சுற்றி வருகிறார் அம்மணி. 
 

 
லாக்டவுன் நேரத்தில் குடிப்பழத்தில் இருந்து மீள்வதற்கு யோகா, ஆன்மிகம் என பல விஷயங்களை முயன்றார். நான் குடுப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்று கூட ஓப்பனாக பேட்டியில் கூறினார். இதனை நம்பிய இயக்குனர்கள் அம்மணிக்கு வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். 
 
தற்போது சென்னையில், படமாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் நடிகையின் கேரவேன் பக்கம் போகவே அஞ்சி நடுங்குகிறார்கள் படக்குழுவினர். கேப் கிடைக்கும் போதெல்லாம் புகை.. ப்ரேக் கிடைக்கும் போதெல்லாம் குடி என கேரவேனை ஒரு நடமாடும் பார் ரேஞ்சுக்கு உபயோகப்படுத்தி வருகிறாராம் அம்மணி. 
 
கேரவேனுக்குள் நுழைந்தாலே பப்ளிக் டாய்லெட் போல குப்பென முகத்தில் அடிக்கும் கெட்ட வாடை தான் படக்குழு நடிகையின் கேரவேனுக்குள் நுழையவே பயப்பட காரணமாம். அநேகமாக, அம்மணி நடிக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Blogger இயக்குவது.