மாஸ்டர் படத்தில் இதை கவனிச்சீங்களா..? - லோகேஷ் கனகராஜ் நிஜாமவே வேற லெவல்..!


ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 
 
மாபெரும் வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. சுமார் 10 மாதங்கள் கழித்து இந்தப் படம் வெளியானதால், பல்வேறு வெளியீட்டுச் சிக்கல்களைச் சந்தித்தது 'மாஸ்டர்' படக்குழு. 
 
இறுதியாக சில ஏரியாக்களில் படத்தை விநியோகஸ்தர் இல்லாமல் நேரடியாகவே வெளியிட்டார்கள். இறுதியில் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
 
OTT தளங்களில் படம் வெளியான பிறகும் பெரும்பாலான திரையங்குகளில் மாஸ்டர் படம் இன்னமும் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. இதன் மூலம், OTT-யில் படங்களை பார்க்க ரசிகர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என்பது திரையரங்குகள் தான் படம் பார்பதர்க்கான இடம் என ரசிகர்கள் விரும்புவது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. 
 
இது, படங்களை வெளியிடும் OTT தளங்களுக்கு ஏமாற்றம் தான். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மாஸ்டர் படத்தில் எந்த அளவுக்கு அற்பணிப்புடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார் என்பதை சில காட்சிகளை வைத்து கூறி வருகிறார்கள் ரசிகர்கள். 
 

தேங்க்ஸ் பா..

 
 
அதன் படி, நடிகர் விஜய் மெட்ரோ ரயிலில் சண்டை போடும் காட்சியில் "மெட்ரோ ட்ரெய்ன் விட்டதில் இருந்து ஏறனும்ன்னு நெனச்சிட்டு இருக்கேன். இப்போ தான் ஏற முடிஞ்சது.. நல்லா இருக்குல.. தேங்க்ஸ் பா.." என்று கூறுவார். 
 
இந்த வசனம் ஸ்க்ரிப்டிலேயே இல்லையாம். முதன் முதலாக மாஸ்டர் படப்பிடிப்பின் போது தான் மெட்ரோ ட்ரெய்னில் ஏறியுள்ளார் தளபதி விஜய். இதற்கு, படப்பிடிப்பு தளத்திலேயே லோகேஷ் கனகராஜிற்கு நன்றி கூறியுள்ளார் விஜய். 
 
சற்றும் யோசிக்காமல் படத்திலேயே வசனமாக வைத்து விட்டார் லோகேஷ் கனகராஜ். 
 

நம்பர் ப்ளேட்ல கூட

மேலும், மாஸ்டர் திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டதாக இருந்தாலும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி நாகர்கோயிலில் இருப்பதால் சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக கவனம் செலுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். 
 
அதன் படி, நாகர்கோயிலில் நடப்பது போன்று வரும் காட்சிகளில் தோன்றும் வாகனங்கள் கூட நாகர்கோயிலின் பதிவெண் "TN 74" கொண்டதாகவே தேர்வு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். 
 
லோகேஷ் கனராஜின் இந்த அர்பணிப்பை பார்த்த பிறகு ஒரு விஷயம் நியாபகத்திற்கு வருகின்றது. ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.. வேறு வேறு கால கட்டத்தில் நடிக்கும் காட்சியில் இருவருக்கும் ஒரே ஸ்கூட்டியை வைத்து அடிச்சு விடும் இயக்குனர்கள் மத்தியில் இப்படி நம்பர் ப்ளேட்டில் கூட கண கச்சிதமாக வேலை பார்த்துள்ள லோகேஷ் கனகராஜ் நிஜமாவே வேற லெவல் தான்.
Powered by Blogger.