"இவ்ளோ வேலை செஞ்சு மண்டைக்கு மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களே டா.." - கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது.
முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது.
ஆனால் இதில் தனுஷூக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கும் உடன்பாடில்லை எனக் கூறப்பட்டது. இதனிடையே அரசு அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்தது.
இந்நிலையில் நேற்று ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியானது.
டீஸரில், “ கூ இஸ் சுருளி என்று ஒருவர் கேட்க, பின்னணி குரலில் சோம சுந்தரம், சுருளி ஒரு பயங்கரமான தாதா என்பது போல தனுஷூக்கு அறிமுகம் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து வரும் சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷின் பேச்சும், செயலும் ரசிக்க வைக்கின்றன.
கடுப்பின் மேல் கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்
சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என உங்களை போல் நானும் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், படக்குழு நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியிட்ட முடிவு செய்துவிட்டது. இது தனுஷ் ரசிகர்களை கடுப்பாக்கியது. இது கூட பராவயில்லை, இந்நிலையில் இன்று காலை வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டீசரில் தனுஷின் பெயரை குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது.
ஆம் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், தயாரிப்பாளர் சஷிகாந்த் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என முன்னணி பிரபலங்களின் பெயரை குறிப்பிட்டிருந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷின் பெயரை என போடவில்லை என்று கடுப்பில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.