தற்கொலை செய்து கொள்வதை முன் கூட்டியே வாட்சப்பில் தெரிவித்த தல ரசிகர் - ட்ரெண்ட் ஆகும் #RIPPrakash..!


தல அஜித் குமார் தனது ரசிகர்களின் மீது தீராத அன்பினை கொண்டவர். 40 வயதிற்கு பிறகு தனது ரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார். 
 
இப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்ட அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருக்கின்றனர். அவர்களுள் ஒருவர்தான் தல பிரகாஷ். 
 
தனது உடல் முழுவதுமே தல அஜித்குமார் பற்றிய செய்திகளை டாட்டூவாக வரைந்திருக்கிறார். தனது வீடு எங்கிலும் அஜித்குமாரின் புகைப்படங்களை நிறைத்து வைத்துள்ளார். 
 
தனது முதுகில் அண்ணன் அஜித் குமார் என்று அவர் பச்சை குத்தி இருக்கிறார்.இந்நிலையில் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இன்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
 
தல அவர்களின் மீது தீராத அன்பு கொண்ட ரசிகர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அவரது நண்பர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும், அவரது நண்பர் ஒருவர் அவருடைய கடைசி வாட்சப் ஸ்டேட்டஸ்களை அப்லோட் செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவது குறித்து ஹின்ட் கொடுத்துருக்கான்.. பாக்காம விட்டுட்டோமே என்று கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.