குடி போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டையிட்ட தனுஷ்..? - தீயாய் பரவும் புகைப்படம்..! - வெடித்த சர்ச்சை..!


சினிமா வட்டாரம் என்றாலே சர்ச்சை சம்பவங்களுக்கு பஞ்சம் இருக்காது. அவ்வப்போது பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம். 
 
அப்படி வைரலாகும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புவதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒன்று தான். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் தனுஷ் , திரிஷா, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் ஒரு இளைஞர் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 
கூடவே மதுபாட்டில்களும் உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நடிகர் தனுஷ் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் சண்டைக்கு செல்வது போல கையை முறுக்கிக்கொண்டு நிற்கிறார். ஜெயம் ரவியோ கடுப்பில் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்வது போல இருக்கிறார். 
 
இது ஏதேனும் படத்தின் காட்சியா..? அல்லது நிஜமாகவே நடந்த சம்பவமா என்று தெரியவில்லை. இது ரசிகர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கியமாக, ஹோட்டலின் உள்ளே அமர்ந்திருந்த ஒருவர் தான் தன்னுடைய கைப்பேசி மூலம் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார் என்பது கண்ணாடியில் தென்படும் பிம்பம் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. 
 
திடீரென இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது புதிய படமா.? இல்லை பழைய படமா..? நிஜமாவே சண்டை போடுறாங்களா..? இல்லை. ஏதாவது ஷூட்டிங்கா..? என்று குழம்பி போயுள்ளனர். 
 

 
இது சம்பந்தமாக புகைப்படத்தில் இருப்பவர்கள் தான் விளக்கம் தந்தால் தான் தெளிவு பிறக்கும். இல்லையென்றால் காது.. மூக்கு.. வாய் எல்லாம் வைத்து ஒரு புது கதையை உருவாக்கி விடுவார்கள் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Blogger இயக்குவது.