"ஏ.. உடும்பு.. மரவெட்ட மாதிரி இருக்க உனக்கு மசால் வடை சைஸ்ல மச்சம் இருக்கு டா..." - ப்ரியா அட்லி வெளியிட்ட புகைப்படம் - வயிறு எரியும் சிங்கிள்ஸ்..!


ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் நான்கு படங்களை மட்டுமே இயக்கி அந்த நான்கு படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலில், முன் வரிசையில் சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குநர் என்றால் அது அட்லி தான். 
 
இந்த நிலையில் அட்லி அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்க போகிறார் ஹீரோ யார்.? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது, அதனால் அட்லீ படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் படத்தை தயாரித்து வருகிறார். அட்லீக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அதனை பலமுறை மேடையில் கூறியுள்ளார். 
 
இவர் இயக்கிய நான்கு படங்களில் 3 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.இவர் சிங்கம் படத்தில், அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்த, நடிகை பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணா பிரியா. 
 
இவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற சீரியலில் தான் நடித்தார். அதன் பின் சிறு சிறு குறும்படங்களில் நடித்து கொண்டு வந்தார். பின் இவர் சினிமாவில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். 
 
 
இவர்களுக்கு திருமணம் ஆகி, 6 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போதும் இளம் காதல் ஜோடிகளாக சுற்றி வருகிறார்கள். ப்ரியா அட்லி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டாலும், அட்லி பட ஷூட்டிங் நடக்கும் எல்லா இடங்களுக்கும் கூடவே சென்று விடுகிறார். 
 
 
அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு சென்று, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை வழக்கமாக பயிற்சி செய்யும் இவர் அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.


 
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லி, தனது காதல் கணவருக்கு ஆசை ஆசையாக முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்துவைத்த அட்லி என கூறி பெருமூச்சு விட்டவாரு இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
Blogger இயக்குவது.