கோவை தெற்கு : கமல்ஹாசனுக்கு எதிராக யாரு பிரச்சாரம் பண்றாங்கன்னு தெரியுமா..? - அடக்கொடுமைய..!
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக, திமுக மட்டுமின்றி மக்கள் நீதி மையம் கட்சி தீவிரம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த தேர்தலில் கருத்து கணிப்புகள் என்று ஒரு பக்கம் அந்த கட்சி தான் ஜெயிக்கும் என வந்து கொண்டிருக்க, களத்தின் கணிப்பு அதற்கு எதிராக நிற்கிறது.
மக்கள் முடிவு என்ன என்பதை மே 2-ம் தேதி தான் பார்க்க முடியும். இந்த தேர்தலில் கவனிக்கப்படும் ஒரு கட்சி என்றால் அது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தான். இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் பலம் என்னவென்று தெரியும். வெற்றியோ, தோல்வியோ.. ஆனால், 2026 சட்ட மன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்சியாக கமல்ஹாசன் வளரலாம்.
8% வாக்கு கிடைத்தால் போதும், அடுத்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு பயங்கர டிமாண்ட் இருக்கும். இதனை மனதில் நிறுத்தியே முன்னணி அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்ஹாசன். கோவை மாவட்டம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்.
வானதி சீனிவாசனுடன் பலப்பரீட்சை
அங்கே அவரை எதிர்த்து நிற்க்கும் முக்கிய வேட்பாளர் பா.ஜ.க-வை சேர்ந்த திருமதி.வானதி சீனிவாசன் என்பவர் தான். வானதி சீனிவாசன் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர். காரணம், கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலில் அதே தொகுதியில் களம் கண்டு 33,000 வாக்குகளை பெற்றவர் இவர். மேலும், கூட்டணி கட்சியான அதிமுக 60,000 வாக்குகளை பெற்றிருந்தது.
ஆக, சென்ற தேர்தலில் கூட்டணி கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களின் வாக்குகளை அப்படியே வாங்கி விட்டால் போதும் வானதி சீனிவாசன் வென்று விடுவார். ஆனால், இதெல்லாம் வெறும் பேப்பர் கணக்கு தான். களம் இப்போது கமல்ஹாசன் வருகையால் நிச்சயம் பெரு பாதிப்பை கண்டிருக்கும். ஆனால், கமல்ஹாசன் அவர்களுக்கு கடுமையான போட்டி என்று தான் சொல்ல வேண்டும்.
கமலுக்கு எதிராக முன்னாள் மனைவி
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர் பற்றிய செய்தி தான் மய்யதினரை கொஞ்சம் ஜர்க் ஆக்கியுள்ளது. ஆம், கமல்ஹாசனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவது வேறு யாருமல்ல, அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான கௌதமி அவர்கள் தான்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் தீவிர அரசியலில் இயங்கி வருகிறார். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவுள்ளார்.
#ஆரம்பிக்களாங்களா....