ஆடும் போது "அது" தெரியும் படி ஆட சொன்னார் - பிரியங்கா சோப்ரா பகீர் புகார்..!
பள்ளி பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்ட முதல் இந்திய நடிகை, உலகமே உற்று நோக்கிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்தில் கலந்துகொண்ட ஒரே பாலிவுட் நடிகை, இந்திய நடிகைகளில் ஹாலிவுட் முகமாக உலகளவில் புகழடைந்த ஒரே நடிகை போன்ற பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் பிரியங்கா சோப்ரா.
பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தின் அசோக் சோப்ரா, மது சோப்ரா மருத்துவத் தம்பதிகளின் மூத்த மகளாக 1982 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பிறந்தார். வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல; தென்னிந்திய மாநில மக்களும் பிரியங்கா சோப்ராவை சொந்தம் கொண்டாடலாம்.
ஏனென்றால், அவரது அம்மா மது சோப்ரா கேரளாவைச் சேர்ந்தவர். அவரது, அப்பா ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்ததால் வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார். பிரியங்கா சோப்ராவின் படிப்பும் மாநிலம் மாநிலமாக மாறிக்கொண்டே இருந்தது.
உலக அழகி
பள்ளிப்படிப்பின்போதே மாடலிங் துறை மீதான ஆர்வம்தான், ஃபேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தையும் வெல்ல வைத்தது.கடந்த 2000 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது உலக அழகி பட்டம் வென்றார்.
இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்ற ஐந்தாவது பெண் இவர். தமிழில், கடந்த ஆண்டு வெளியான தமிழன் படத்தின் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த படமே அவருக்கு கடைசி படமாக அமைந்து விட்டது.
சமீபத்தில், தன்னுடைய சுயசரிதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் பிரியங்கா சோப்ரா. அதில் பல சர்ச்சையான விஷயங்களை கூறியுள்ளார். அந்த வகையில், முன்னணி இயக்குனர் மீது அவர் வைத்துள்ள குற்றசாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
அது தெரியும் படி ஆடு
அதில் கூறியுள்ளதாவது, நடிகர் சல்மான் கான் உடன் ஒரு பாடலில் செம செக்ஸியாக நடனமாட இயக்குநர் ஒருவர் சொன்னார் என்றும், ஒவ்வொரு ஆடைகளாக கழட்டி எறியவும் சொன்னார். அதற்கு கூடுதலான ஆடைகளை அணிந்து கொள்கிறேன் என தனது ஆடை வடிவமைப்பாளரை வைத்து பேசிய போது, என்ன வேணா பண்ணிக் கோங்க கடைசியா நீங்க போட்டுருக்க ‘ஜட்டி' தெரிய ஆடனும், அதை பார்க்கத் தானே ரசிகர்கள் தியேட்டருக்கு வராங்க என்றார்.
அடுத்த நாளே அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என தனது சுயசரிதையில் கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, நானும் கிளாமரா பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அந்த இயக்குநர் பேசிய முறை, நடிகைகளை இழிவாக பார்க்கும் அந்த எண்ணம் தான் அந்த படத்தில் இருந்து என்னை விலக செய்தது என்றும் விளக்கி உள்ளார்.