"உங்க பின்னழகை வைக்க வேற இடமே இல்லையா..?" - பிரியங்கா சோப்ராவை விளாசும் ரசிகர்கள்..!
2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்க்கு ஜோடியாக‘தமிழன்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
மேலும் குவாண்டிகா என்ற பாலிவுட் தொலைக்காட்சி தொடரில் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அமெரிக்க பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
அவருக்கு பிரியங்காவை விட பத்து வயது குறைவாகும்.சர்வதேச நடிகையாக வலம் வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில், தனது சுயசரிதையில் ஏகப்பட்ட ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்.
லண்டனில் இருக்கும் பிரியங்கா, 'டெக்ஸ்ட் ஃபார் யூ' படப்பிடிப்பை முடித்துள்ளார். இதற்கிடையே தி சண்டே டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், 38 வயதான பிரியங்கா, தனக்கும் 28 வயதான நிக்கிற்கும் இடையிலான 10 வயது இடைவெளி, மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு இரண்டுமே தடையாக இல்லை என்று கூறினார் பிரியங்கா. "நிக் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல” இந்திய கலாச்சாரத்தை பிடித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், ஒரு சாதாரண ஜோடியைப் போலவே, நீங்கள் ஒருவருக்கொருவர் பழக்கவழக்கங்களையும், விரும்புவதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தடைகளை கண்டுபிடிக்க முயற்சிப்பதை விட இது ஒரு சிறந்த வழி என்றார். ஆக எது ஒன்றும் தங்கள் உறவில் கடினமாக இல்லை” என்றார்.
இந்நிலையில், தன்னுடையகணவன் நிக் ஜோனஸ் பாடியுள்ள "ஸ்பேஸ் மேன்" என்ற ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒருவிண்வெளி வீரர் போன்றபொம்மையின் கையின் தன்னுடைய பின்னழகை வைத்து போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் பின்னழகை வைக்க வேற இடமே இல்லையா..? என்று விளாசிவருகிறார்கள்.