"எங்களை அரஸ்ட் பண்ணுங்க மேடம்.." - யாஷிகா வெளியிட்ட புகைப்படம் - கதறும் ரசிகர்கள்..!
நடிகை யாஷிகா ஆனந்த வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து எங்களை அரஸ்ட் பண்ணுங்க என்று கதறி வருகிறார்கள் ரசிகர்கள். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார்.
யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான். சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா.
இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் போலவே இவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன.
அந்த வகையில் இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது, "சல்பர்" என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அரஸ்ட் பண்ணுங்க மேடம் என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.