"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க - ஆனால்.." - வெளிப்படையாக கூறிய நீலு ஆண்ட்டி..!

 
சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகைகளும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் சில நமிட காட்சிகள் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். 
 
இதில், சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்ட்டி இரண்டாவது ரகம். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ஜீவா நீலு ஆண்டியிடையே நடக்கும் ரொமான்ஸ் மற்றும் காட்சியின் முடிவில் அது ஜீவாவுடைய தோழியின் அம்மா தான் என்று தெரியவருவது எல்லாம் ‘A’ ரகம். 
 
இந்த படத்தில் சில நிமிட காட்சியில் தான் நீலு நடித்தார். என்றாலும், இளசுகள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டார். பலரும் இவர் சிங்கம் புலி படத்தில்மட்டும் தான் நடித்துள்ளார் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். ஆனால், பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தோன்றிய காட்சிகளை தொகுத்து எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த புகைப்ப்டங்கள் இணையத்தில் திடீரென வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின. இந்நிலையில்,சமீபத்தில் பேட்டி oஒன்றில் பேசிய நீலு ஆண்ட்டி படப்பிடிப்பு தளத்தில்,படங்களில் துணை நடிகைகள் படும் கஷ்டங்கள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். 
 

இங்கெல்லாம் வர கூடாது என விரட்டுவார்கள்

 
 
அவர் கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகைகளுக்கு சரியான கழிவறை வசதி இருக்காது, அமருவதற்கு ஷேர் கொடுக்க மாட்டார்கள். சில நேரம் உடை மற்றும் அறை கூட இருக்காது. உடை மாற்றும் அறை வேண்டும் என்று மேனேஜரிடம் கூறினால் கதாநாயகியின் கேரவேனுக்குள் சென்று மாற்றிக்கொள்ள சொல்வார். 
 
சரி என்று போனால் நடிகையின் உதவியாளர் இங்கெல்லாம் வர கூடாது என்று விரட்டுவார்கள். ஓய்வு எடுக்க கூட இடம் இருக்காது. கிடைக்கும் இடத்தில் படுத்து தூங்குவோம். சில நேரம் பகல், இரவு என 18 மணி நேரம் கூட ஷூட்டிங் நடக்கும் அப்போதெல்லாம் மிகவும் சோர்வாகி விடுவோம் சிறிது நேரம் உட்காரலாம் என்று நினைத்தால் ஒரு ஷேர் கூட இருக்காது. அருகில் இருக்கும் பைக் அல்லது தரையிலேயே அமர்ந்து கொள்வோம். 
 
துணை நடிகைகளை பார்த்தாலே முன்னணி நடிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோயின்கள் கேவலமாக தான் பார்ப்பார்கள். மேலும், படத்தின் ஷூட்டிங் மிகவும் தூரமான இடத்தில் நடக்கும் போது துணை நடிகைகள் எல்லோரும் சேர்ந்து வேனில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். 
 

ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்..

 
 
ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அந்த கேரக்டர்.. இந்த கேரக்டர்.. ஹீரோயினுடன் வரும் சீன்..  ஹீரோவுடன் வரும் சீன் என்று தான் அழைப்பார்கள். ஆனால், நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டியான உடைகளை கொடுத்து நடிக்க சொல்வார்கள். 
 
இதனை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என்று மறுத்தால்.. சரி நடிக்க முடியாதவர்கள் கிளம்புங்கள் என்று கூறி விடுவார்கள். நீண்ட தூரம் பயணம் செய்து வந்த பிறகு திரும்பி போங்க என்று இப்படி சொன்னால் துணை நடிகைகள் என்ன செய்வார்கள். 
 
மேலும், வேண்டுமென்றால் பேமெண்ட் அதிகமாக குடுக்குறோம் நடிங்க என்று கூறுவார்கள். அவர் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பணப்பிரச்சனை இருக்கும் போது இப்படி சொன்னால் என்ன பண்ணுவார்கள்.
 
சரி என்று சில நடிகைகள் ஒத்துக்கொண்டு நடிப்பார்கள். சிலர் அப்போதும், குட்டியான உடைகளை அணிந்து நடிக்க முடியாது மறுத்து விட்டு திரும்பியும் சென்று விடுவார்கள். இப்படி பல பிரச்சனைகள் உள்ளது. 
 
எல்லாவற்றையும் கடந்து நடித்துகொடுத்து சம்பாதிக்கிறோம். ஆனால், எங்களுடைய கஷ்டம் பலருக்கும் வெளியே தெரிவது கூட இல்லை என்று சிரித்தபடியே கூறுகிறார் நீலு ஆண்ட்டி.
Blogger இயக்குவது.