"ஒரிஜினல் நாட்டுகட்ட..." - மாடர்ன் உடையில் மயக்கும் அழகில் சீரியல் நடிகை சுஜிதா - வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழில் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா மார்டன் உடையில் கலக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சிரியல்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் உள்ளது.
இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கான இந்த சீரியல்கள், பணியில் இருக்கும் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களையும் வெகுவாக பார்க்கும் அளவுக்கு மாற்றியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பெரும்பாலான மக்கள் சீரியல் ரசிகர்களாக மாறியுள்ளனர்.இதில் விஜய் டிவியில் ஒளிபரபரபாகும் சீரியல்களுக்கு எப்போது தனி மவுசுதான். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன், ஹேமா, காவிய அறிவுமணி ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியல், தொலைக்காட்சி வரலாற்றில், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் என்ற சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கு தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், சகோதரர்களின் பாசப்பினைப்பையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை சுஜிதா.
பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவரை அடையாளம் காட்டியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். இதன் மூலம் அவர் தமிழக மக்களிடம் அதிகமான பிரபலமடைந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது சுஜிதா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைலாகி வருகிறது.
இதுவரை பரம்பரிய உடையில் மக்களுக்கு தெரிந்த நடிகை சுஜிதா தற்போது, மாடர்ன் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் சுஜிதாவா இது மாடர்ன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து இருக்கிறார் என லைக்குகளை அள்ளி வருகிறது.