"என் இதயம் வலிக்கிறது" - "வாழ்கையில் இப்படி ஒரு வலியை நான் உணர்ந்ததில்லை" - VJ தியா மேனன் கண்ணீர்..!


வி.ஜே தியா மேனன் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார். கோயம்புத்தூர் பெண் தியா, +2 படிக்கும்போதே உள்ளூர் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். 
 
படிக்கும்போதே டிவி ஆங்கராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். படிப்புக்கு தடை வராது என்றால் ஆங்கரிங் பண்ணலாம் என்று வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்க, அன்று ஆரம்பித்த பயணம் இன்று சன் டிவி வரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. 
 
சன் டிவியில் "சூப்பர் சேலஞ்ச்' மற்றும் "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தி வரும் வி.ஜே. தியா மேனன் திருமணம் வெகு விமரிசையாக சமீபத்தில் நடந்தது. 
 
மாப்பிள்ளை கார்த்திக் சிங்கப்பூர்வாசி என்பதால் திருமணம் முடிந்த கையோடு சிங்கப்பூரில் செட்டிலாகப் போகிறார் என்ற செய்தியால் சன் டிவி ரசிகர்கள் சற்றே வருத்தமடைந்தனர். 
 
சமீபத்தில், பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து இறந்து விட்டார். அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் உறைந்தனர். 
 
 
இந்த நிலையில் சித்ராவை பற்றி ஒவ்வொருவரும் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவரது நெருங்கிய தோழியான தியா மேனன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.


அதில், காலண்டரில் ஒவ்வொரு மாதம் 9-ம் தேதியை பார்க்கும் போதும் உன்னுடைய நினைவு என்னை வாட்டுகின்றது. உன்னுடன் பழகியதருணங்களை யோசிக்கும் போது இதயம் வலிக்கிறது. உன்னை பிரிந்தது தான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த அதிகபட்ச வலியை கொடுத்தது.
Blogger இயக்குவது.