நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவை பார்த்தால் கல் நெஞ்சமும் கண்ணீர் விடும்..! - இதோ அந்த பதிவு..!


மதுரையில் பிறந்து சின்னக்கலைவாணராக மக்களின் மனதில் வாழ்ந்து மறைந்துள்ளார் நடிகர் விவேக். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும். 
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்த விவேக், தீராத சினிமா தாகம் கொண்டவர். 1986 ஆம் முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழக தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார் விவேக். 
 
அரசு ஊழியராக பணியாற்றினாலும் சினிமா மீதான கொண்ட ஆசையால் கலைத்துறையில் பயணத்தை தொடங்கினார். 
 
தமிழ் திரைப்படத்துறையில் சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் தனது திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனை கருத்துக்களை பரப்பி வந்தவர். 
 

அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் 'சின்னக்கலைவாணர்' எனப் போற்றப்பட்டார்.
 
மழை வெள்ளம், புயல், நோய்த்தோற்று என எந்த சமூக பிரச்சனையாக இருந்தாலும் நான் வரேன் என்று முதல் ஆளாக ஓடி வந்து மக்களுக்கு விழிப்புணர்வை தன்னுடைய ஸ்டைலில் ஊட்டி விடுவார்.

இவரது சமூக வலைதள பக்கத்தில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை அதிகம் பார்க்க முடியாது. சமூக சேவை செய்பவர்களை வாழ்த்துவதும், சமூக சேவை செய்யும் விஷயங்களும் தான் தென்படும்.
 
நீங்க தான் Inspiration 😇 

அந்த வகையில், கடைசியாக, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவதை தன்னுடைய பகுதி நேர ஏற்றுக்கொண்ட ரசிகர் ஒருவர் "நான் தண்ணீர் விடும் முன் வாடி இருந்த செடிகள் 🥀 நான் தண்ணீர் ஊற்றிய பின் பூ 🌷 பூத்து இருப்பதை பார்க்க இனம்புரியாத ஆனந்தம் மனதில் 😇 @Actor_Vivek sir, நான் இந்த part time வேலையில் சேர நீங்க தான் Inspiration 😇 " என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த நடிகர் விவேக், "இதை நான் மிக உயர்ந்த பாராட்டாக கருதுகிறேன் ! மிக்க நன்றி . எந்த வேலையும் தாழ்வானது அல்ல!!" என்று அந்த ரசிகருக்கு நன்றி கூறியுள்ளார்.
 

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Blogger இயக்குவது.