"அட தொயரத்த...." - இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை..! - வைரலாகும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித் ரசிகர்கள் இடையே யார் நம்பர் ஒன் என்பதில் எப்போதும் போட்டி நிலவுகிறது. தியேட்டர் வசூலில் மட்டுமல்ல டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். 
 
தற்போது விஜய், அஜித் நடித்த படங்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மிழ் சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கும் நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் மிக முக்கியமானவர்கள். 
 
இவர்களது படங்கள் எவ்வளவு வசூலித்தது, எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதுதான் அவர்களுடைய ரசிகர்களின் வாக்குவாதமாக உள்ளது தியேட்டர் வசூலில் எப்படியான போட்டி இருக்கிறதோ அப்படியே டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். 
 
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது. இப்படத்தின் ரேட்டிங் இன்று வெளிவந்தது. அதன்படி அப்படத்தின் தடப்பதிவு 1,37,55,000 ஆக மட்டுமே கிடைத்துள்ளது. 'பிகில்' படத்திற்குக் கிடைத்த ரேட்டிங்கை விடவும் இது குறைவுதான். 
 

டிவி ரேட்டிங்கைப் பொறுத்தவரையில் இதுவரையில் 'விஸ்வாசம்' படம்தான் 1,81,43,000 தடப்பதிவுகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'மாஸ்டர்' படம் முறியடிக்குமா என்ற கேள்வியும் கடந்த வாரம் எழுந்தது. 
 
இரண்டு வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கும் 'விஸ்வாசம்' சாதனையை 'மாஸ்டர்' முறியடித்துவிடும் என்றும் எதிர்பார்த்தார்கள். விஜய், விஜய் சேதுபதி என இரு முக்கிய நடிகர்களின் படம் என்பதும் அதற்குக் காரணமாக இருந்தது. 
 
ஆனாலும், எதிர்பார்த்தபடி டிவி ரேட்டிங் அமையவில்லை. 'மாஸ்டர்' படம் ஒளிபரப்பான அதே நேரத்தில் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 
 

 
அந்த போட்டியையும் 'மாஸ்டர்' சமாளிக்க முடியாமல் போயிருக்கிறது.இப்படி இருக்க ப்ரமோஷன் என்ற பெயரில் மாஸ்டர் தொலைக்காட்சி ப்ரீமியருக்கு அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சீரியலிலேயே கொடுத்திருந்த ப்ரோமோ வீடியோ தான் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
Blogger இயக்குவது.