ஓட்டு போட வந்த இடத்துல செல்ஃபியா..? - ஓட்ரா அந்தாண்ட... - ஆர்வக்கோளாருகளை வெளுத்துவிட்ட தல அஜீத்..! - வைரல் வீடியோ..!


தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கரோனா தொற்று அதிகரித்து வருவதால் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. 
 
சென்னையில் திரையுலக பிரபலங்கள் வாக்களிக்க வரும் நேரம் உள்ளிட்டவை பத்திரிகையாளர்களுக்குப் பகிரப்பட்டது. ஆனால், அஜித் வரும் நேரம் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டது. ரசிகர்கள் குழுமிவிடுவார்கள் என்பதே காரணம் என்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
காலை 6:30 மணியளவிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துவிட்டார் அஜித். முதல் நபராக வந்துவிட்டதால், அந்த வாக்குச்சாவடியில் 7 மணிக்கு முன்னதாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு முதல் நபராக அவர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
அஜித் வாக்களிக்க வந்தபோது, அவருக்கு அருகில் காவல்துறையினர் வர சற்று தாமதமானது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கக் கூடினார்கள். அஜித் அவர்களை கோபமாக முறைக்கவே ரசிகர்கள் சிலர் திரும்பிச் சென்றார்கள். 
 
அப்போது இன்னொருபுறம் அங்கிருந்த சில ஆர்வக்கோளாருகள் சிலர் அஜித்துடன் செல்ஃபி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தனர். அப்போது அவருடைய போனை வெடுக்கென பறித்த அஜித் உடனே அவரிடம் போனை திருப்பி கொடுத்து விட்டார். 
 
அதன் பிறகு, ஒட்டு போட வந்த இடத்துல என்னடா செல்ஃபி ஓடுங்கடா அந்தாண்ட என்று கூறுவது போல கையை அசைத்து அங்கிருந்த ஆர்வக்கோளாறுகளை அப்புறப்படுத்தினார் தல அஜீத். 
 
 
- நன்றி பாலிமர் நியூஸ்

 
நல்ல வேளை நடிகர் சிவக்குமார் கிட்ட இந்த பதறுகள் செல்ஃபி எடுக்க போகல இல்லை என்றால் செல்போன் பறந்திருக்கும்..
Blogger இயக்குவது.