"நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - நடிகை கனிகா வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..!
கோலிவுட் திரையுலகில், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், நடிகையாகவும் அறியப்படும் நடிகை கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான கனிகா, '5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது.
ஆயினும் , அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.
ஆனாலும் , அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ட்ரெண்ட் ஆகியது.
இந்நிலையில் நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று கலாய்த்து வருகிறார்கள்.