ரசிகர்கள் அதிர்ச்சி : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சற்று முன் மருத்துமனையில் அனுமதி..!
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.
சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்படக்கூடியவர். தொடர்ந்து சமூக சீர்த்திருந்த கருத்துக்களை பரப்பி வரும் நடிகர் விவேக் சற்று முன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும்,முதற்கட்ட சோதனையின் முடிவில் இதயத்தின் வால்வுகளில் அடைப்புஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
தற்போதைக்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், அவரது குடும்பதினர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதனை அறிந்த ரசிகர்களை அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைந்து குணமடைய வேண்டும் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.