"நேச்சுரல் ப்யூட்டி... - ஹாட் குயின்...." - துளி மேக்கப் இல்லாமல் மிரட்டும் ஸ்ரீதிவ்யா..! - உருகும் ரசிகர்கள்..!

 
சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்‌ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 
அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது.
 
பிரபல இயக்குநர் அட்லி தயாரிப்பில் 2017ம் ஆண்டு வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.
 
 
அதர்வா நடித்த ’பாணா காத்தாடி’, 'செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகாத நிலையில், விதவிதமாக போட்டோ ஷூட்டுகளை இறக்கி விட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 

அந்தவகையில் தற்போது துளியும் மேக்அப் இன்றி, இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. ஹாட் குயின் என்று வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.