"கொஞ்சம் ஹாட்.. கொஞ்சம் க்யூட்.." - ஸ்லீவ்லெஸ் உடையில் சாய்பல்லவி - இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்..!
‘பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி . இவர் தமிழில் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . தான் நடிக்கும் படத்தில் கதா பாத்திரங்களில் வெரைட்டி, சவாலான கேரக்டர்கள் என அனைத்திலும் வித்தியாசம் காட்டும் சாய் பல்லவி, கவர்ச்சி என்ற சொல்லைக் கேட்டாலே காத தூரம் ஓட்டமெடுக்கிறார்.
அதே போல் முத்தம் தருவது போல் காட்சிகள் இருந்தாலும் அதில் ரொம்பவே கஞ்சத்தனம் காட்டுகிறார். முத்தக்காட்சி இருக்கிறது என்பதற்காக டியர் காம்ரேட் படத்தையே வேண்டாம் என்று ஒதுக்கினாராம் சாய் பல்லவி.
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளிவந்து வெற்றி நடை போட்ட படம் டியர் காம்ரேட் படத்தில் நடிக்க சாய் பல்லவியைத்தான் கேட்டார்களாம்.
படத்தின் கதையை கேட்ட அவர், லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிப்பதற்கும், ஓவர் கிளாமர் காட்டி நடிப்பதற்கும் தனக்கு துளி கூட இஷ்டம் இல்லை, அதனால் நீங்கள் வேறு ஹீரோயினை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.
2005ஆம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும், 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் கேரக்டரில் நடித்ததால் ஒரே படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் சாய் பல்லவி.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிசர்களின் நெஞ்சத்திலும் நீக்கமற நிறைந்துவிட்டார்.அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், முதலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தாராம்.
பின்பு மலர் டீச்சர் ரோலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.தற்போது, நடிகர் நாகசைதன்யா நடித்துள்ள "லவ் ஸ்டோரி" படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்ட அவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், மெல்லிய புடவை சகிதமாக வந்திருந்தார்.அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.