"தேவதை.. செக்ஸி ஸ்மைல்.." - நடிகை சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முன்னணி கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா.
இதற்கு முன் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவின், திருவனந்தபுரத்தில் பிறந்த சுஜிதா, இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் திரையைப் பகிர்ந்துள்ளார் சுஜிதா. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
சுஜிதா விளம்பர துறையைச் சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. மலையாளத்தில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கிய இவர், 40-ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் இவர், கன்னடத்திலும் இதே தொடரில் நடித்து வருகிறார்.
எப்போதும், புடவை சகிதமாகவே தென்படும் இவர் சுடிதாரில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், தேவதை.. செக்ஸி ஸ்மைல்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.