"அட... த்தே..னட..." - உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் ஜாங்கிரி மதுமிதா - வைரல் போட்டோஸ்..!
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்தின் ஜோடியாக கலக்கிய மதுமிதா சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குப் போனவர்தான். தற்போது மீண்டும் சின்னத்திரையில் காமெடி சீரியல்களில் நடித்து வருகிறார்.
ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் காமெடி' நிகழ்ச்சிதான் இவரது மீடியா அறிமுகம். தொடர்ந்து "லொள்ளு சபா', "காமெடி பஜார்', "சூப்பர் 10', "மாமா மாப்ளே' என காமெடி சீரியல்களில் நடித்துள்ளார்.
சிவா மனசுல சக்தி படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடிஷனுக்கு சென்ற போது சந்தானத்துடன் நடிக்க தேர்வானாராம்.
"ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பின்னர் அட்டக்கத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகி என்று கூறி அழைத்தார்களாம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் மதுமிதா.
இதனை தொடர்ந்து, முனி-3, "வெள்ளைக்கார துரை' உள்பட சில படங்களில் நடித்தார். சிறந்த காமெடி நடிகையாக வேண்டும். அதற்கு நம்பிக்கையும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது.
எல்லாத்துக்கும் மேலாக அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் சினிமாவில் ஜெயிக்கவே முடியாது என்கிறார் மதுமிதா.இந்நிலையில், இறுக்கமான சட்டை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அட.. த்தேனாட... என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.