மாலத்தீவில் நடனம் - இணையத்தை கலக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..!


1980 -களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். 
 
இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பின் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
 
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
 
ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் படம் வரும் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
 
தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 

இவரது சர்ச்சையான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகை ஜான்வி மாலத்தீவில் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
Powered by Blogger.