"நம்ம அஞ்சலியா இது..? - இன்னும் இது மாதிரி எத்தன இருக்கு..." - வைரல் புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
பிரபல தமிழ் நடிகையான அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் அடைக்கலம் புகுந்தார். பிறகு திடீரென்று மாயமான அஞ்சலி எங்கே போனார், என்ன ஆனார்? என்பது மர்மமாக இருந்தது.
அமெரிக்கா சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபருடன் ரகசியமாக குடித்தனம் நடத்துவதாகவும் தகவல் வெளியானது. திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த அஞ்சலி, நான் எங்கும் ஓடவில்லை.
இந்தியாவில்தான் இருக்கிறேன் என்றும் கூறி கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலி முன்பை விட இப்போது கவர்ச்சியாக தெரிவதால், அவரை ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அழைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதையெல்லாம் தாண்டி தற்போது தட்டு தடுமாறி சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அஞ்சலி, கல்கி நடித்த பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் Famous ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன.பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அதே போன்று கதைகள் அமைந்ததால் அஞ்சலி தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் முதன் முதலில் 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.
பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். இந்நிலையில், ஆரம்ப காலத்தில் படு சூடான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம அஞ்சலியா இது..? இன்னும் இது மாதிரி எத்தனை போட்டோவ மறச்சி வச்சிருக்கீங்க..? என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.