கவர்ச்சிக்கு "நோ" சொன்ன சாய்பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தான் நடிக்கும் படத்தில் கதாபாத்திரங்களில் வெரைட்டி, சவாலான கேரக்டர்கள் என அனைத்திலும் வித்தியாசம் காட்டும் சாய் பல்லவி, கவர்ச்சி என்ற சொல்லைக் கேட்டாலே காத தூரம் ஓட்டமெடுக்கிறார். அதே போல் முத்தம் தருவது போல் காட்சிகள் இருந்தாலும் அதில் ரொம்பவே கஞ்சத்தனம் காட்டுகிறார். 
 
முத்தக்காட்சி இருக்கிறது என்பதற்காக டியர் காம்ரேட் படத்தையே வேண்டாம் என்று ஒதுக்கினாராம் சாய் பல்லவி. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளிவந்து வெற்றி நடை போடும் படம் டியர் காம்ரேட் படத்தில் நடிக்க சாய் பல்லவியைத்தான் கேட்டார்களாம். 
 
படத்தின் கதையை கேட்ட அவர், லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிப்பதற்கும், ஓவர் கிளாமர் காட்டி நடிப்பதற்கும் தனக்கு துளி கூட இஷ்டம் இல்லை, அதனால் நீங்கள் வேறு ஹீரோயினை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.
 
2005ஆம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும், 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் கேரக்டரில் நடித்ததால் ஒரே படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் சாய் பல்லவி. 
 
இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிசர்களின் நெஞ்சத்திலும் நீக்கமற நிறைந்துவிட்டார்.தற்போது உள்ள நடிகைகளில் அப்ப்ப்பா என்ன அழகுடா இந்த பொண்ணு என ரசிகர்கள் ரசிக்கும் நடிகை என்றால் அது நடிகை சாய் பல்லவி தான். 
 
 
நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான சாய் பல்லவி பின்னர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது தாய் தந்தையின் ஆசைக்காக மருத்துவ படிப்பை முடித்த சாய் பல்லவி தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
ஏற்கனவே சில திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் இயக்குனர்கள் சாய் பல்லவிற்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகின்றனர். 


இனி இழுத்து மூடி நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட சாய் பல்லவி தற்போது கவர்ச்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Powered by Blogger.