"என்ன பொண்ணுடா.. - குட்டியூண்டு நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்புதே..." - அதிர வைக்கும் ஆலியா பட்..!

 
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் ஹாலிவுட்டில் கவனம் செலுத்திய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆலியா பட், ராஸி, கலன்க், கல்லி பாய் போன்ற படங்களில் நடித்து பாலிவுட் குயினாக மாறியுள்ளார். 
 
பாலிவுட்டின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக ஆலியா பட் அசத்தி வருகிறார்.பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். 
 
கடந்த, 2019ஆம் ஆண்டின் ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகையாக ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டார். லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் அய் என்ற வார இதழ் நடத்திய வாக்கெடுப்பில் ஹிந்தி நடிகை ஆலியா பட் முதலிடத்தையும், தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தையும், தொலைக்காட்சி நடிகை ஹினா கான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 
 
இதேபோல் 6ஆவது இடத்தில் ஹிந்தி நடிகை கத்ரினா கைப், 10ஆவது இடத்தில் பிரியங்கா சோப்ரா ஆகியோர் பிடித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலியா பட், ஒருவருக்கு இருக்கின்ற நல்ல குணங்களே உண்மையான அழகு. அதனை நம் தோற்றங்கள் தீர்மானிப்பதில்லை என தெரிவித்துள்ளார். 
 
 
2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் கல்லி பாய் என்ற படத்திற்காக அலியா பட் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியான கலன்க் படத்தில் நடிகை ஆலியா, நடித்திருந்த நிலையில், ராஜமெளலி படத்திலும் கமீட் ஆகியுள்ளார்.
 
 
பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஆலியா பட், ஃபேஷனிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார். புதிதாக ஃபேஷன் துறையில் ஏதாவது ஒரு ஆடை வந்தால், அந்த ஆடையை ஆலியா பட், சோதனை செய்து பார்க்காமல் விடமாட்டார். 


அதே போன்று அவ்வப்போது ஃபேஷன் இதழ்களின் அட்டைப் படங்களிலும் ஆலியா தோன்றி ரசிகர்களை குதூகலப்படுத்துவார். இந்நிலையில், மாலத்தீவு கடற்கரையில் குட்டியூண்டு நீச்சல் உடையில் தன்னுடைய பிரமாண்ட அழகுகள் எடுப்பாக தெரியும் படி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.