"நீச்சல் உடையில் மணலில் புரண்டு.." - உஷ்ணத்தை கூட்டும் மிருகம் பட நடிகை பத்மப்ரியா..!
திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நடிகை பத்மபிரியா நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படு சூடான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மிருகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பத்மபிரியா.
சிறந்த நடிகையான பத்மபிரியா தவமாய் தவமிருந்து படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இவர் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் இவர் சினிமாவில் தலை காட்டவில்லை. இந்நிலையில், இவரின் பிகினி புகைப்படம் வெளியாகியுள்ளது. திருமணத்துக்கு பிறகும் ஜோதிகா, அமலாபால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்க வந்துள்ளனர்.
அந்தவரிசையில் தவமாய் தவமிருந்து, பட்டியல், இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படங்களில் நடித்த பத்மப்ரியாவும் நடிக்க வந்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை மணந்து இல்லறத்தில் செட்டிலானார். 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகியிருந்தார்.
மீண்டும் நடிக்கும் ஆசை துளிர்விட்டதையடுத்து, ஜெகபதி பாபு நடிக்கும் பட்டேல் சார் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார் பத்மப்ரியா. இதுபற்றி பத்மப்ரியா கூறும்போது, ‘ஜெகபதி பாபு ஜோடியாக நடிக்க கடந்த 15 ஆண்டுக்கு முன் எனக்கு வாய்ப்பு வந்தது.
அது நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அமைந்தது சந்தோஷம். நவநாகரீக பெண்ணாக இதில் நடிக்கிறேன். ஒரு நடிகையாக, நடிப்பு பசியுடன் நான் இருக்கிறேன். சினிமாவில் எந்தவிதமான வேடமாக இருந்தாலும் ஏற்பேன். இனி, நிறைய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்’ என்றார்.