ஆண்டுகள் பல ஆகியும்.. முன்னணி நடிகை ஆக முடியாத அஞ்சலி..! - திடீர் முடிவு..!

 
தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். இவர் கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 
 
அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அங்காடித்தெரு படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நிறுத்தியது இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடிக்கிறார். 
 
தமிழில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
 
அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.நடிகைகள் க வர்ச்சியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் ஆனால் இவர் முக பாவனைகளை வைத்தே இன்னும் பல வருடங்கள் சினிமாவில் நீடிப்பார் என்று பலரும் இவர் நடிப்புத் திறமையை பாராட்டி உள்ளனர். 
 
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். 
 
என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. இதனால், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
Powered by Blogger.