"அவ எனக்கு தான்டா.." - ஒரு நடிகைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் இரு முன்னணி நடிகர்கள்..! - அட தொயரத்த..!
சினிமா வட்டாரத்தில் லவ்வு, ஜவ்வு, கவ்வு எல்லாமே சகஜமான ஒரு சங்கதி. ஆனால், ஒரு நடிகைக்காக இரண்டு நடிகர்கள் அடித்துக்கொள்வது, ஒரு நடிகருக்காக இரண்டு நடிகைகள் அடித்துக்கொள்வது எல்லாம் ரேராக நடக்கும் விஷயங்கள். அப்படி ஒரு ரேரான விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இரண்டு நடிகர்களிடையே நடந்து வருகின்றது.
வெற்றியான நடிகர் அந்த கடை வீதி நடிகையுடன் சிறிது காலம் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது, நடிகையும், நடிகரும் அல்மோஸ்ட் ஃபீல்ட் அவுட் என்ன நிலையில் உள்ளனர்.
அவ்வப்போது நடிகைக்கு போன் போட்டு மறுபடியும் சேர்ந்து வாழலாமா என்று நோகடித்து வருகிறாராம் வெற்றி நடிகர். ஆனால்.. அப்படி கேக்கும் போது எல்லாம் நடிகர் செம்ம மப்பில் தான் இருப்பாராம். இதனால், நடிகை கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், அனகோண்டா நடிகருடன் நடிகைக்கு நெருக்கம் ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்து நிற்கிறதாம் விவகாரம். நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்று போன நடிகருக்கும், ஏற்கனவே வேறு நடிகருடன் லிவ் இன் டு கெதர் வாழ்ந்து விட்டு இருக்கும் கடைவீதி நடிகைக்கும் பத்து பொருத்தமும் பச்சக் பச்சக் என பொருந்தி வருகிறதாம்.
இதனால், திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள் இருவரும். விஷயம் அறிந்த வெற்றி நடிகர், அனகோண்டாவின் நண்பர் என்பதால் நேரடியாக இது பற்றி பேசியுள்ளார்.
அவ என்னோட ஆளு டா என்று வெற்றி நடிகர் கூற.. அவ எனக்கு தாண்டா என்று அனகோண்டா சீற.. கூத்து நடந்து வருகின்றது கோலிவுட்டில். ஆனால், நடிகையோ வெற்றி நடிகரெல்லாம் வேண்டாம், கட்டுனா அனகோண்டாவை தான் கட்டுவேன் என கறார் காட்டி வருகிறாராம்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்த வட்டாரங்கள்.