உடல் எடை குறைத்து ஒல்லியான இந்துஜா ரவிச்சந்திரன்..!


நடிகை இந்துஜா ’மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே பலரின் பாராட்டுக்களை பெற்றார்.வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். தங்கச்சி பாடலில் இறங்கி ஒரு குத்து குத்தி இருப்பார்.
 
அதைதொடர்ந்து விளங்காத சில படங்களில் நடித்தாலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி முகத்தை பலபலவென பாலிஷ் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்
 
தற்போது விஜய் ஆண்டனி, ஸ்ரீ காந்த் உடன் இணைந்து காஹி என்ற படத்தில் நடித்து வருகிறார்.தமிழக ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் Chubby-யான பெண்களைத்தான் அதிகம் பிடிக்கிறது. 
 
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி போன்ற நடிகைகள் ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று பின்னர் உடல் எடையை குறைத்து ரசிகர்களிடம் சுத்தமாக கவனிக்கப்படாமல் மார்க்கெட்டை இழந்தனர்.
 
இப்போது தான் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இந்துஜா தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் உடல் எடையை குறைத்து விட்டார்
Blogger இயக்குவது.