"இதனால தான்.. மெர்சல் படத்தை ஒத்துக்கல.." - முதன் முறையாக போட்டு உடைத்த ஜோதிகா..!

 
தீபாவளி ஸ்பெஷலாக 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து. ஆனால் அத்தனை தடைகளை கடந்து வந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். 
 
அப்பா வெற்றிமாறன், 5 ரூபாய் டாக்டர், மேஜிக்மேன் என இரண்டு மகன்கள் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அழகிய பஞ்சாபி பெண்ணாக அந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது. 
 
மெர்சல் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே நித்யா மேனன் வந்திருந்தாலு, மற்ற விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, காஜல் அகர்வாலை விட அவர் தான் ரசிகர்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்தார். அப்படிப்பட்ட நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அட்லி அணுகியது ஜோதிகாவை தான். 
 
 
ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்றே ஜோதிகா மீது கோபத்தில் இருந்தனார்.மதமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். 
 
இவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று அனைத்தும் ஹீரோயினுக்கு ஆசை உண்டு. அது மட்டுமில்லாமல் இவர் படத்தில் நடித்தால் கண்டிப்பாகப் பிரபலமடையலாம் என்பதற்காகவே பல கதாநாயகிகள் நீ, நான் என்று போட்டிப் போடுகின்றனர். அப்படி இருக்கும் சூழலில் இவருடன் மெர்சல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஜோதிகா மறுத்துள்ளார். 
 
 
இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். தற்போது இவர் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது இவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ெர்சல் படத்தில் ஜோதிகா நடிக்காததற்கான காரணம் குறித்து தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது அட்லி கதை சொல்லும் போது ஜோதிகாவிற்கு அந்த ஸ்கிரிப்ட் பற்றி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மேலும் தனது கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு காரணமாக தான் அந்த படத்தில் நடிக்கவில்லையோ, தவிர வேறு எந்த காரணமும் இல்லை என மனம் திறந்துள்ளார்.
Powered by Blogger.