விபத்து நடக்க சில நொடிகள் முன்பு எடுக்கப்பட்ட காட்சிகள் - தீயாய் பரவும் வீடியோ..!
பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்த், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமானார்.
நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டிவந்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பவானியின் உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அதிவேகமாக காரை ஓட்டியது. உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இறந்து போன யாஷிகா ஆனத்தின் தோழி பவானியுடன் யாஷிகா எடுத்துக்கொண்ட கடைசி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், குடிப்பழக்கம் நமக்கு மட்டும் கேடு அல்ல, நம் உடன் இருப்பவர்களுக்கும் கேடு என்று கூறி வருகிறார்கள்.