இயக்குனருடன் தகராறில் ஈடுபட்ட நடிகை மீரா மிதுன்..! என்ன காரணம்..!
மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார்.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தனர்.பிக் பாஸுக்கு பிறகும் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது அவர் புகார்களை கூறியது சர்ச்சை ஏற்படுத்தி, மீரா மிதுனை அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தாளித்து எடுத்தனர்.
மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அன்பரசன் இயக்கி வரும் படம் பேய காணோம். பேய காணோம் என்று புகார் செய்யும் வித்தியாசமான படமாக உருவாகி வருகிறது.
அந்த படத்தில் கவுசிக் ஹீரோவாக நடிக்கிறார்.மீரா மிதுன் தான் ஹீரோயின். தருண் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.