இந்திய சினிமா வரலாற்றில் அதிக நஷ்டத்தை கொடுத்த படங்கள் - இதோ பட்டியல்..!


இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் தற்போது இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இந்தியாவில் வசூல் செய்யும் தொகைக்கு சரி நிகராக ROI என்று சொல்லப்படக்கூடிய இந்தியா நீங்கலாக உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வசூல் ஆகின்றது. 
 
உதரணமாக, ஒரு இந்திய படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்தால் அதே 100 கோடியை உலகம் முழுதும் வசூலிக்கிறது. அதற்கு பாகுபலி, தங்கல் படங்கள் அடைந்த வெற்றியும்.. பிரமாண்ட வசூலும் உதாரணம். 
 
பாகுபலி 2 ரூ 1700 கோடி, பஜிரங்கி பைஜான் ரூ 850 கோடி என வசூல் சாதனை படைத்து வருகின்றது. அதே நேரத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் தான் இத்தகைய சாதனையை செய்ய, அதே பெரிய நடிகர்களின் படங்கள் தான் பெரும் தோல்வியையும் சந்தித்து வருகின்றது. 
 
அந்த வகையில் இந்தியாவை பொறுத்த வரை அதிகம் நஷ்டமான படங்கள் என்று பார்த்தால் ஒரு ஹிந்தி படம் இரண்டு தெலுங்கு படம் வரிசை கட்டி நிற்கின்றது. 
 
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட படங்கள் பட்டியல் இங்கே...
 
பாம்பே வெல்வெட் 
 
அனுராக் காஷ்யூப் இயக்கத்தில் ரன்பீர், அனுஷ்கா ஷர்மா நடித்த பாம்பே வெல்வெட் சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ 40 கோடி தான் வசூலே செய்தது. 
 
ஸ்பைடர் 
 
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் என்ன தான் ரூ 150 கோடி வசூல் சாதனை என்று சொன்னாலும், உண்மை நிலவரம் மிகவும் மோசம், இப்படம் ரூ 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ 80 கோடி தான் வசூல் வந்தது.
 
அஞ்ஞாதவாசி
 
திரி விக்ரம் நடிப்பில் பவன் கல்யான் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் Agnyaathavaasi, இப்படம் ரூ 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 85 கோடி தான் வசூல் செய்தது. 
 
ரங்கூன் 
 
விஷால் பரத்வாஜ் இயக்கத்தின் ஷாகித் கங்கனா சயிப் அலிகான் நடிப்பில் வெளிவந்த ரங்கூன் ரூ 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 40 கோடி தான் வசூல் செய்தது. 
 
மேலும் தமிழ் சினிமாவை பொறுத்த வரை பார்த்தால் பெரிதும் நஷ்டம் எந்த படத்திற்கு இல்லை என்றாலும் தானா சேர்ந்த கூட்டம், பைரவா, விவேகம் ஆகிய படங்கள் ரூ 10 கோடி வரை மட்டுமே நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.