கூடும் பிரியங்கா சோப்ராவின் மவுசு..! - இது தான் காரணமா..?
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் போட்டோக்களில் மிரள வைக்கிறார்.
அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவிற்கான மவுசு நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.