"நீங்களும் அப்படி தானே நெனச்சீங்க..." - அந்த இடத்தில் கை வைத்தபடி பிந்து மாதவி போஸ்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!
தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார்.
அந்த வகையில் இதுவரை, வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 , போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
ஆனால் கழுகு 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தமிழில் 'மாயன்' மற்றும் 'யாருக்கும் அஞ்சலே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பிந்து மாதவி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இதில் கலந்து கொண்டு விளையாடிய அனைவர்க்கும் பட வாய்ப்புகள் கிடைத்த போதிலும் பிந்து மாதவிக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் விதவிதமான போட்டோ ஷூட் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிந்து, தற்போது, இந்த லாக் டவுன் நேரத்தில் முடிந்தவரை... பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய தோழியின் பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில், தனது கையை அவரது தோழியின் அந்த இடத்தில் வைத்தபடி போஸ்கொடுத்துள்ளார்.
ஆனால், ஜூம் செய்து பார்த்ததால் தான் அவர் கையில் போனை வைத்திருப்பது தெரிகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களும் அப்டித்தான நெனச்சீங்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.