அதே வளைவு... அதே நெளிவு.. - இந்த வயதிலும் இப்படியா..? - இணையத்தை கலக்கும் சிம்ரன்..!
90-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன், விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் இருந்தது.
பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் அது நிறைவேறியது. நடிகை சிம்ரன் தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது.இப்படத்தில் பிஸியான நடித்துவரும் சிம்ரன், ஓய்வு நேரத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த சூப்பரான ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தன் அபார நடிப்புத் திறமையாலும், தனித்துவம் வாய்ந்த நடனத் திறமையாலும் தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்க இடம் பிடித்திருப்பவர் நடிகை சிம்ரன். இவர் நடித்த வாலி, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், பிரியமானவே போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் விருப்பிய படங்களாகும்.
அதுவும் சிம்ரனின் இடுப்பு நடன அசைவு அல்டிமெட் அந்த அசைவுக்கு இன்று வரை ரசிகர்கள் இருந்து வருகிறார். இப்படி ஒரு நடனத்தை நடிகை சிம்ரன் ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அதே வளைவு , அதே நெளிவு கொஞ்சம் கூட அழகு குறையல என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.