"இவ்ளோ பெரிய காயமா..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


கடந்த ஜூலை 25ம் தேதி புதுச்சேரிக்கு நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது அதிவேகமாக ஓட்டியதால் யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். 
 
அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். யாஷிகாவிற்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், காலில் மிகப்பெரிய கட்டுடன், மருத்துவமனை படுக்கையில் படுத்தியிருக்கும் போட்டோவை வெளியிட்டார். 
 

 
தற்போது உடலில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு மிகப்பெரிய தையல் போட்டுள்ள வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் விரைவில் நலமடைந்து மீண்டு வருவீர்கள்... கவலை வேண்டாம் என ஆறுதல் கூறி வருகின்றனர்.
Blogger இயக்குவது.