"செல்லமே... பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - லைக்குகளை அள்ளும் "டாக்டர்" பட நடிகை..!

 
இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அவர்களின் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருப்பவர் நடிகை பிரியங்கா அருள்மோகன். தமிழ் சினிமாவில் இது தான் இவருக்கு முதல் திரைப்படம். 
 
எப்பொழுது இத் திரைப்படம் வெளியாகும் இத்திரைப்படத்தின் மூலம் தனது ரசிகர்கள் திரை உலகிற்கு தன்னை வரவேற்பாரா என்ற பல யோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவர் டாக்டர் திரைப்படத்திற்கு முன்னதாகவே 2 தமிழ் திரைப் படங்களில் நடிப்பதாக கையெழுத்து போட்டுள்ளார். 
 
ஆனால் ஒரு சில காரணங்களால் திரைப்படம் இன்றளவும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு மூன்றாவது திரைப்படமாக தான் டாக்டர் திரைப்படத்தில் கையெழுத்திட்டு தற்பொழுது நடித்து முடித்துவிட்டார். 
 
பல புதுமுக நடிகர்கள் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் திரைப்படத்திலேயே பிரபலமாகுவது உண்டு. அந்த வகையில் தற்பொழுது பிரியங்கா மோகன் அவர்களும் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
 
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் தமிழ் சினிமாவிலும் தனக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எண்ணி வருகிறார் நடிகை பிரியங்கா மோகன்.
 
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக போட்டோ ஷூட் நடத்தி வரும் இவரது ஒரு சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 


இதனை பார்த்த ரசிகர்கள், செல்லமே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று உருகி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.