"வலிமை" படத்தில் அஜித்தின் பெயர் இது தான்..! - செம்ம மாஸா இருக்கே..!

 
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். 
 
யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. 
 
இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து டிரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்தாக நேற்று ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. 
 
 
முதலில் இரவு 7 மணி எனக்கூறப்பட்ட நிலையில், பின்னர் அது இரவு 10.45 மணியாக மாற்றப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’ எனத் தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. 
 
இரவு நேரமாகவே இருந்தாலும் தல ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்துவிட்டனர். பாடல் வெளியாகி 21 மணி நேரம் ஆன நிலையில், 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. 
 
 
படத்தில் ஒரே ஒரு பைட் சீன் மட்டுமே பாக்கி என்றும், அதற்காக விரைவில் படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும்

கூறப்படுகிறது. மேலும் வலிமை படத்தை தீபாவளி விருந்தாக தியேட்டர்களில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 
 
 
இந்நிலையில் தல அஜித் வலிமை படத்தில் என்ன பெயரில் நடித்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன்னதாக வலிமை ஒரு குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் திரைப்படம் என்ற தகவல் வெளியானது. 
 
தற்போது இந்த படத்தில் அர்ஜுன் என்ற பெயரில் அஜித் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முன்பு அஜித் கதாபாத்திரத்தின் பெயர் கோமகன் என தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.