"கால், இடுப்பில் பெரிய கட்டுடன்..." மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் - சற்று முன் வெளியான புகைப்படம்..!

 
ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். கடந்த ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்றார். 
 
மகாபலிபுரம் அருகே நடந்த மோசமான விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . 
 
இந்த விபத்து குறித்து போலீஸார், யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு யாஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
நடிகர் தாடி பாலாஜி யாஷிகாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வந்த நிலையில் தற்போது காலில் பெரிய கட்டுடன் படுத்திருக்கும் யாஷிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், விரைவில் நலம் பெற வேண்டுகிறோம் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.