"சிலை அழகுன்னா இது தான் போல.." - ஹனி ரோஸின் அழகை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

 
பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். பாலமுருகன் இயக்கத்தில் விக்ராந்த் ஜோடியாக, முதல் கனவே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
பிறகு, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தார். இவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் வினயன். அவர் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் அறிமுகமானார். 
 
அந்தப் படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை.அடுத்து அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்தார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது. 
 
மலையாளத்தில், மோகன்லால் மம்மூட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.இவர் பகத் பாசில், முரளி கோபி, அபிநயா ஆகியோருடன் ஒன் பை டூ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், 2014 ஆம் ஆண்டு வெளியானது. 
 
இதில், ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த முத்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், சமீபத்தில் வைரலாயின. 
 

இந்நிலையில்,ஆற்றின் ஓரம் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சிலை அழகுன்னா இது தான் போல என்று உருகி வருகிறார்கள்.
Powered by Blogger.