என் வயிற்றை பாருங்க.. என் பின்னழகை பாருங்க.. என் ஆர்ம்ஸ்-ஐ பாருங்க.. - அதகளம் பண்ணும் பரினீதி..!
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்... ஒரு தேசிய விருது உட்பட பாலிவுட்டின் பல விருதுகளை வென்றார். ஒரு நாயகி உருவாகிவிட்டார். வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
ஆனால், பரினீதி அவசரப்படவில்லை. தனக்குப் பிடித்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.பரினீதி வழக்கமான பாலிவுட் ஹீரோயின் கிடையாது.
கட்டையான குரல், நடிப்பதற்கு முன் அவரின் எடை 85 கிலோ. வங்கி அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் அவரின் கனவு. சினிமா, நடிகர்கள், நடிப்பு... இதெல்லாமே ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ வைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
அது அவருக்குப் பிடிக்காது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை நெருக்கமாக கவனிக்க ஆரம்பித்தார். தன் கஸின் பிரியங்கா சோப்ரா சினிமா மீது காட்டும் ஈடுபாடும், உழைப்பும் அது மீதான பார்வையை அவருக்கு மாற்றியது.
தன் சுயத்தை இழக்காமல் சினிமாவில் ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. தன்னை தயார் படுத்திக் கொண்டார். தன் இலக்கை அடைந்தார். ஒரு பேட்டியில், நான் ஒரு பாலிவுட் வகை நடிகை கிடையாது.
எனக்குப் பிடித்த உடைகள் தான் அணிவேன். எனக்குப் பிடித்த படங்களில் தான் நடிப்பேன். எனக்குப் பிடித்த மாதிரிதான் வாழ்வேன். இதன் காரணமாக எனக்கு வாய்ப்புகள் குறைவதால் எனக்கு கவலையில்லை.
ஏனென்றால், எனக்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும் என்று கூறினார். தற்போது, தன்னுடைய உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி.
அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகுகளை திருப்பி திருப்பி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதகளம் பண்ணியுள்ளார் அம்மணி.