"தொள தொள டீசர்ட்... ஜன்னல் வச்ச லெக்கின்ஸ்.." - தலைகீழாக தொங்கும் நடிகை அஞ்சலி..!
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன்பின் ’அங்காடித்தெரு’ ’தூங்காநகரம்’ ’மங்காத்தா’ ’எங்கேயும் எப்போதும்’ ’அரவான்’ ’சேட்டை’ ’சிங்கம்-’2 ’இறைவி’ ’தரமணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்திலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.